சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பரில் நடக்கவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணாமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பரில் நடக்கவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணாமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், பின்னர் குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.
இந்த சூழலில் சீனாவில் கொரோனா தற்போது அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சீனாவின் ஹாங்ஷு நகரில் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த கூடாது என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்பதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறைந்து வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சுமார் 56 போட்டி தளங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.