சிகிச்சைக்கு வந்த பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொல்லாத டாக்டர்.. சொந்த விந்தணுவை செலுத்தி செய்த பயங்கரம்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 17, 2021, 5:58 PM IST

ஆனால், உண்மை என்னவெனில் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் மோரிஸ் வோர்மேன் தனது சொந்த விந்துவை செலுத்தினார், அது அந்த பெண்ணுக்கு தெரியாது, பிறகு கருவுற்ற அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 


கருவுறுதல் சிகிச்சைக்காக வந்த பெண்களுக்கு தனது சொந்த விந்துவை பயன்படுத்தி ஒரு மருத்துவர் பெண்களை கருவுறச் செய்ததாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அந்த  மருத்துவரின்  விந்தணுவால் பிறந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க்கில் ரோசெஸ்டரில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன். கடந்த 1980ஆம் ஆண்டு இவரை தேடி கருவுறுதல் சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்தார். அப்போது அந்த  பெண்ணிடம் உள்ளூர் மருத்துவ மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விருந்தணுவை செலுத்தி அந்த பெண்ணை கருவுற செய்ய உள்ளதாக கூறினார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ஆனால், உண்மை என்னவெனில் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் மோரிஸ் வோர்மேன் தனது சொந்த விந்துவை செலுத்தினார், அது அந்த பெண்ணுக்கு தெரியாது, பிறகு கருவுற்ற அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்தப் குழந்தையும் பெரியவளாக வளர்ந்து அதே மருத்துவரிடம் மகளீர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண் தனது டிஎன்ஏவை பரிசோதனை செய்தாதில், அந்த பெண்ணுடன் ஒத்த  ஒன்பது உடன்பிறப்புகள் இருப்பதாக முடிவு காட்டியது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அது குறித்து தனது தாயாரிடம் விசாரித்தார். (ஏற்கனவே தான் ஒரு டோனர் பேபி என்பது அந்த பெண் அறிந்திருந்தார்) பின்னர் ஒரு கட்டத்தில் மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன் டிஎன்ஏ உடன் தனது டிஎன்ஏ ஒத்துப்போவதும் தெரிந்தது, இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் அவரது தாயாரும் இதுகுறித்து மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து மோரிஸ் வோர்ட்மேன் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது சார்பாக வழக்கறிஞர் மட்டுமே பேசி வருகிறார். தற்போது இந்த சம்பவம் விவாத பொருளாக மாறி உள்ளது.  சிகிச்சை பெற வரும் பெண்களுக்கு பல மருத்துவர்கள் டோனர் விந்தணு என கூறி, தங்களது சொந்த விந்துவை செலுத்தி கருவுற வைக்கும் சம்பவங்களும் அது தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது. மருத்துவர்கள் சிலர்  மற்றவர்களுடைய விந்துக்களை விட தங்களது விந்துக்களை சிகிச்சைக்கு பயன்படுத்துவதான குற்றச்சாட்டு அந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டது. நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விந்து என கூறி சிகிச்சை பெற வரும் பெண்களுக்கு இந்தியானா மருத்துவர் டொனால்ட் கிளீன் என்பவர் தனது சொந்த விந்துவை பயன்படுத்தி 12 பெண்களை கர்ப்பமடைய வைத்தார் என்பது பின்னாளில் தெரிந்தது.

பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கில் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து நீதிமன்றம் அவரது மருத்துவ உரிமையை ஒரு வருடத்திற்கு ரத்து செய்ததுடன், அவர் ஓராண்டுவரை சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சொந்த விந்துவை செலுத்தி மருத்துவர் சிகிச்சை வாங்கியுறள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 

click me!