இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் ஆங்காங்கே வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். சில இடங்களில் தலிபான்களின் துப்பாக்கிகளுக்கும் அவர்களின் காம இச்சைக்கும் ஆப்கன் பெண்கள் இரையாகி வருகின்றனர்.
3 வயது குழந்தையை தோளில் சுமந்து கொண்டு வீதிக்கு வந்த தாயை தலிபான்கள் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என கூறி வந்த நிலையில், இந்த செயல் அவர்களின் கொடூர முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. இருபது ஆண்டுகள் கழித்து அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை அடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் தலிபான்களின் முக்கிய ஐந்து தலைவர்களை மையமாகக்கொண்டு இடைக்கால அரசு நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் இருக்காது என்றும், அவர்கள் பெண்களை அடிமைகளாக நடத்தப்படுவார்கள் என்பதாலும், அந்நாட்டுப் பெண்கள் தலிபான்களுக்கு எதிராக கடுமையாக மன உளைச்சலில் குமுறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியின்கீழ் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ஏராளமான ஆப்கன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், ஆப்கன் குடிமக்கள் யாரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனைவருக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தலிபான்கள் பொது அறிவிப்பு வெளியிட்டனர். ஆனாலும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை.
இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் ஆங்காங்கே வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். சில இடங்களில் தலிபான்களின் துப்பாக்கிகளுக்கும் அவர்களின் காம இச்சைக்கும் ஆப்கன் பெண்கள் இரையாகி வருகின்றனர். இந்நிலையில் தலிபான்களின் கொடூரத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக கொடூர சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது, மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்ணை அவர்கள் ஈவுஇரக்கமின்றி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் ஃபர்வா கடந்த வெள்ளிக்கிழமை தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார், அப்போது வெளியில் சென்ற அவரது கணவர், தான் திரும்பி வரும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி மனைவிக்கு எச்சரித்துவிட்டு சென்றார். ஆனால் அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது,
உதவி வேண்டும் என்று கேட்பது போல குரல் எழுந்ததால், கதவை மெல்லத் திறந்து வெளியில் வந்தார் ஃபர்வா, அவரைத் தொடர்ந்து அவரின் மூன்று வயது குழந்தையும் வந்தது, அந்த குழந்தையை தோளில் தூக்கி வைத்தபடி, அக்கம் பக்கம் பார்த்தார் ஃபர்வா, அப்போது அந்த தெருவில் முகாமிட்டிருந்த தலிபான்கள் ஒரு பெண் தனது குழந்தையுடன் வெளியில் நிற்பதைக் கண்டு அந்த பெண்ணை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர், அதில் சம்பவ இடத்திலேயே தாய் ஃபர்வா சரிந்து விழுந்தார். அவளது கையில் மூன்று வயது குழந்தை இருப்பதைக் கூட பொருட்படுத்தாத அந்த கொடூரர்கள் அந்தப்பெண்ணை பலியாக்கினர். உடனே சத்தம் கேட்டு வெளியில் வந்த அந்த பெண்ணின் குழந்தைகள் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு தாயின் உடலை சுற்றி நின்று கதறி அழுதனர்.
இங்கு வந்த கணவர் உஸ்மான் தனது மனைவி சடலமாக கிடப்பதை கண்டு கதறினர், அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை யார் சுட்டது என அவர் கேட்டார், அங்கிருந்தவர்கள் எங்களுக்கு தெரியாது என கூறி விலகிச் சென்றனர், ஆனால் அங்கிருந்த தலிபான்கள், யாரோ சுட்டுக்கொன்றனர் என நக்கலாக பதில் அளித்தனர். ஆனால் அவர்களை எதிர்த்து தன்னால் எதுவுமே செய்ய முடியாத இயலாமையின் அவரது கணவர், மனைவியின் உடலை வீட்டிற்கு தூக்கி சென்றார். தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என கூறிய தலிபான்கள் தொடர்ந்து பெண்களை கற்பழித்து, படுகொலை செய்து வரும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது அம்மக்கள் மீது சோகத்தை வரவழைக்கிறது.