Singapore Deep Fake Video : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முதலீட்டுத் தயாரிப்பை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. ஆனால் அது போலியான செய்தி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை டிசம்பர் 29 அன்று பேசிய சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ, பொதுமக்கள் முதலீடுகள் அல்லது கொடுப்பனவுகளில் உத்தரவாதமான வருமானத்தை பற்றி உறுதியளிக்கும் மோசடி வீடியோக்களை எந்தவிதத்திலும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதுவும் இந்த மோசடிகள் தனது முகத்தை பயன்படுத்தி நடப்பதாக அவர் கூறினார்.
"மோசடி செய்பவர்கள், உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட எங்களின் உண்மையான காட்சிகளை மிகவும் நம்பத்தகுந்த ஆனால் முற்றிலும் போலியான வீடியோக்களாக மாற்றுகிறார்கள், நாங்கள் இதுவரை சொல்லாத விஷயங்களைச் சொல்வதாகக் அதில் கூறப்படுகிறது" என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் எச்சரித்துள்ளார்.
undefined
4 ஆண்டுகளுக்கு பின் சென்னை - சவூதி ஜித்தா நகர் இடையே மீண்டும் நேரடி விமான சேவை
டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவது இனியும் "தொடர்ந்து வளரும்" என்றும் திரு. லீ மேலும் கூறினார். "நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தனது பதிவில் கூறினார்.
போலியாக மாற்றப்பட்ட அந்த வீடியோவில், சீன செய்தி நெட்வொர்க் CGTNன் தொகுப்பாளரால் திரு. லீ பேட்டி காணப்படுகிறார். சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீட்டு வாய்ப்பைப் பற்றி அவர்கள் அதில் விவாதிக்கின்றனர், அதை "எலான் மஸ்க் வடிவமைத்த புரட்சிகர முதலீட்டுத் தளம்" என்றும் பிரதமர் பேசுவதுபோல அமைந்துள்ளது.
மேலும் உடனடியாத இந்த சேவைகளை பெற குறிப்பிட்ட அந்த பிளாட்ஃபார்மில் பதிவு செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யும்படி, தொகுப்பாளர் பார்வையாளர்களை வலியுறுத்துவதோடு வீடியோ முடிவடைகிறது. இந்த டீப்ஃபேக் வீடியோ, கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் திரு. லீயுடன் CGTN செய்தி நிறுவனம் எடுத்த நேர்காணலை கொண்டு இந்த போலி வீடியோவை உருவாகபட்டுள்ளது.