ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் இன்று (வியாழன்) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியிருக்கிறது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 10 கிமீ மற்றும் 40 கிமீ ஆழத்தில் நிகழ்ந்துள்ள என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.