மலேசிய தைப்பூசத்தில் காவடி தூக்கிய வெள்ளையர்கள்..! கடல்கடந்து ஒலிக்கும் தமிழ்க்கடவுள் நாமம்..!

By Manikandan S R S  |  First Published Feb 10, 2020, 3:19 PM IST

மலேசியாவில் இருக்கும் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும், காவடி எடுத்தும் 272 படிகள் மேல் அமைந்திருக்கும் முருகனை தரிசித்தனர். தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள் பலரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.


தமிழர் கடவுளான முருகனின் உகந்த நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது. உலகெங்கும் இருக்கும் முருகன் கோவில்களில் கடந்த சனிக்கிழமை அன்று தைப்பூச வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது . தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Tap to resize

Latest Videos

undefined

தைப்பூச திருநாள் முக்கியமாக கொண்டாடப்படும் பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தி, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இரண்டாம் படைவீடான திருச்செந்தூரிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்தனர். 

தமிழகம் மட்டுமின்றி கடல்கடந்தும் முருகனுக்கு கோவில்கள் அமைத்து மக்கள் வணங்கி வருகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் இருக்கும் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும், காவடி எடுத்தும் 272 படிகள் மேல் அமைந்திருக்கும் முருகனை தரிசித்தனர். தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள் பலரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முருகன் வழிபாடு பிரசித்தி பெற்றது. பல்வேறு நாட்டினரும் அங்கு தமிழ் கடவுளாம் முருகனை வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

'நோ சூடு நோ சொரணை’.. நித்தி போட்டோவுடன் கல்யாண பேனர்..! குதூகலிக்கும் வாலிபர்கள்..!

click me!