ஆயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா...!! காற்றிலும் தரையிலும் 9 நாட்கள் வரை உயிர்வாழும் என அதிர்ச்சி...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 10, 2020, 2:19 PM IST

இந்த வைரஸ் காற்றிலோ தரையிலோ  கூட ஒன்பது நாட்கள் வரை உயிரோடு இருக்கும் .  இதுவரை இந்த வைரசுக்கு பிரத்தியேக மருந்துகள் சிகிச்சை முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை 


கொரோனா வைரஸ் ஒன்பது நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .  சீனாவில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உயிர்பலி வாங்கியுள்ள கொரோனா  வைரஸ் குறித்து அடுக்கடுக்கான அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது .  குறைந்த வெப்பநிலையில் அதன் ஆயுட்காலம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன அரசு திணறி வருகிறது . வூகான் நகரிலிருந்து வைரஸ் பல மாகாணங்களுக்கும் பரவியதால் முக்கிய நகரங்களிலும் வைரஸ் தாக்கியுள்ளது . 

Latest Videos

இதனால் ஆள் நடமாட்டம் இன்றி  சீன   நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது .  சீனாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் வேகவேகமாக  சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருக்கிறதா என அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது . சீனாவில் வசித்து வரும்  600க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா திரும்பியுள்ள நிலையில்,  இன்னும் பலர் அங்கேயே தவித்து வருகின்றனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டு  அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து வெளிநாட்டினர் யாரும் இந்தியாவுக்குள் வர அனுமதி இல்லை என இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஹாஸ்பிடல்  இன்பெக்சன் என்ற இதழ்  வெளியிட்டுள்ள கட்டுரையில்,  கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன ,  இதில் ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் கண்டர்கம்ப் ,  கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் ,  குறைந்த வெப்பநிலை ,   காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் , கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும் , இந்த வைரஸ் காற்றிலோ தரையிலோ  கூட ஒன்பது நாட்கள் வரை உயிரோடு இருக்கும் .  இதுவரை இந்த வைரசுக்கு பிரத்தியேக மருந்துகள் சிகிச்சை முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை ,  தற்போதைக்கு இந்த வைரஸ் பரவுவதில் இருந்து தற்காத்துக் கொள்வது முக்கியமானதாகும் .  இந்த வைரஸ் தொடுவதின் மூலமாகவும் ,  காற்றின் மூலமாகவும் வேகமாக பரவுகிறது . அதிக வெப்பநிலையில்  இந்த வைரசின் வீரியம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது

 

click me!