Thailand Tourism : சுற்றுலா துறையை பெரிய அளவில் பலப்படுத்தி, அதன் மூலம் தங்கள் வருவாயை அதிகாரிகள் உலகில் பல நாடுகள் செயல்படுவது இயல்பான ஒன்று தான். அந்த வகையில் தங்கள் நாட்டின் சுற்றுலா துறையை மேன்படுத்த புதிய முயற்சியை எடுத்துள்ளது தாய்லாந்து.
தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, உள்நாட்டு மது வரியை பூஜ்ஜிய சதவீதம் வரை குறைப்பதாக தாய்லாந்தின் அமைச்சரவை அறிவித்துள்ளது, இந்த தகவலை அந்நாட்டு ஊடக நிறுவனமான Thaiger அதிகாரபூர்வகமாக இப்பொது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மற்றும் செலவினங்களுக்கான மைய மையமாக தாய்லாந்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று நிதியமைச்சகச் செயலர் லாவன் சாங்சானிட் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது மதுபானங்கள் மற்றும் உள்ளூர் மதுபானங்கள் மீதான வரி கட்டமைப்பில் சரிசெய்தலை கொண்டுவரப்போகிறது.
உள்நாட்டில் விற்பனையாகும் மது மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும், அதே சமயம் ஸ்பிரிட்கள் 10 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படும் என பிரபல நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த மதுபானத்தை மீதான வரி சலுகைகள் இந்த ஆண்டின் (2024) இறுதியில் காலாவதியாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கூடுதல் சுற்றுலா ரசீதுகள் மூலம் வரி வருவாய் இழப்பு ஈடுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரிகள் பொழுதுபோக்கு இடங்களுக்கான திறப்பு நேரத்தை இரண்டு மணி நேரம் முதல் 4 மணி வரை உல்லாசப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக நீட்டித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதற்கிடையில், தாய்லாந்திற்குள் வரும் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள வரியில்லா கடைகளை (duty free shops) ரத்து செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை உள்ளூர் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ட்யூட்டி-ஃப்ரீ கடைகளில் இருந்து வாங்குவதை விட நாட்டிற்குள்ளேயே வாங்குவதை இது ஆதரிக்கும் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்து கடந்த 2023ல் சுமார் 28 மில்லியன் அளவில் சுற்றுலா பயணிகளை கண்ட நிலையில், இந்த 2024ம் ஆண்டில் சுமார் 34 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.