கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுப்பாட்டிற்குள் வந்தப் பிறகு தேர்வு நடத்தவேண்டும்..!! கதறும் ஆசிரியர்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 18, 2020, 5:10 PM IST

ஒரே நாளில் 9 லட்சத்து  45 மாணவர்களையும் 40,000 மேற்பட்ட ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்படுமா ?
 


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடந்தே தீரும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு மாணவர்-பெற்றோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது .நாளுக்கு நாள் கொரோனா  விஸ்வரூபமெடுத்து  தமிழ்நாட்டில் நோய்த் தொற்று  11 ஆயிரத்தை  தாண்டியுள்ள நிலையில் ,  ஒத்தி  வைக்கப்பட்ட  10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜுன் 1 ந்தேதி  நடத்தப்படும் என்ற அறிவிப்பு ,   இதுவரை பாதுகாப்பாக இருந்த தங்கள் குழந்தைகளை  கொரோனா தொற்றிவிடுமோ என  பயம் பொற்றோர்களை தொற்றிக் கொண்டுள்ளது .  சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள்  10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வெழுத உள்ள நிலையில் அவர்களின்  பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு கூட பேரிடர் காலத்திலும் தேர்வை திணிப்பதால்  படிப்பு இப்போது பாரமாகி உள்ளது . எனவே, நடைமுறை சிக்கலையும் ஆராய்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கிலிருந்த நிலையில் அவர்களை நேரிடையாக தேர்வு எழுதச்சொல்வதால் அவர்கள்  கடும்  மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் . 

Latest Videos

அரசின் அறிவிப்பு  ஏற்கனவே வீட்டிற்குள் முடங்கி  வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் விடுப்பு அளித்ததால் பல மாணவர்கள் சொந்த ஊருக்கு வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளார்கள். மே-31 வரை ரயில்கள் ,பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் அவரவர் வீட்டிற்கு உடனடியாக திரும்ப e-pass வாங்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதும்,   வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   இன்னுப் பல பள்ளி வகுப்பறைகள் கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக இருந்து வருகின்றன, இந்நிலையில் அந்த இடங்களில் எப்படி தேர்வு நடத்த முடியும் ,     மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றாலும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சமாக ஒரு பள்ளிக்கு 20 மாணவர்கள் முதல் அதிகபட்சமாக 1000 மாணவர்கள் வரை தேர்வெழுத உள்ளனர், என்னதான் தேர்வறையில்  தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் பள்ளிக்குள் நுழையும் போதும் தேர்வுமுடிந்து திரும்பும்போதும்  சமூக இடைவெளி கடைபிடிக்க வாய்பில்லை. வினாத்தாள், விடைத்தாள்கள் பிரித்து வழங்குவது முடிந்தபிறகு விடைத்தாளில் முத்திரையிட்டு அனுப்புவதிலும் பாதுகாப்பு இன்மையே தொடரும்.  ஒரே நாளில் 9 லட்சத்து  45 மாணவர்களையும் 40,000 மேற்பட்ட ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்படுமா ? 

ஒருவருக்கு தொற்று இருந்தாலும் பல ஆயிரக்கணக்காணோரைப் அது பாதிக்கும். தமிழ்நாட்டில்  கொரோனாவின் கோரதாண்டவத்தினால் பாதிப்பு 11,000 த்தை தாண்டியுள்ளதால் ஒருவித பயத்துடனே மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒருபுறம் ஊரடங்கு நீட்டிப்பு  மறுபுறம் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வு அறிவிப்பு மேலும் மேலும் வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுகிறது.  எனவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய இயலாதபட்சத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுப்பாட்டிற்குள்  வந்தப் பிறகு தேர்வு நடத்தவேண்டும். அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப்பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சியும் குறைந்தபட்சம்  இரண்டுவாரம் ஆசிரியர்களோடு மாணவர்கள் இருந்தால் மட்டுமே   ஊரடங்கால் உறைந்துபோன உள்ளங்களை உயிர்ப்பிக்க முடியும். இல்லையேல்  10 ஆம் வகுப்போடு கல்வியினை தொடரமுடியாமல் இடைநிற்றலே அதிகரிக்கும். தேர்வுக்கு பாதுகாப்பான வசதிகள் ஏற்படுத்த முடியுமென்றால்  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டுவாரம் பள்ளி வைத்துவிட்டு தேர்வு நடத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

 

 

click me!