சீனாவை உதறித் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் நாட்டு நிறுவனம்..!! 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published May 18, 2020, 4:37 PM IST
Highlights

அந்நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன .  இந்நிலையில் ,  ஆஸ்திரேலியா வைரஸ் உருவானது குறித்து சீனா மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது . 

கிட்டத்தட்ட உலக அளவில் 10 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஜெர்மன் காலணி உற்பத்தி நிறுவனம் சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையை  இந்தியாவுக்கு  இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது . இதனால் மூலம்  இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என உத்திரபிரதேச மாநில அரசு  மகிழ்ச்சி தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  அமெரிக்கா மற்றும்  இத்தாலி , பிரான்ஸ் , ஸ்பெயின் , ஜெர்மனி, உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . சீனாவின் வுஹானில்  தோன்றிய இந்த வைரசால்  ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் நிலைகுலைந்து போயுள்ளன , கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த இந்நாடுகள்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்போதிலும் , அதைக் கட்டுப்படுத்த  முடியாமல் திணறி வருகின்றன.   இதனால் அந்நாடுகளின்  ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பி உள்ளது .  இந்த வைரசை சீனா ஆரம்பத்திலேயே கண்டறிந்து எச்சரித்திருந்தால் இந்த அளவிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்காது ,  ஆனால் முன்கூட்டியே  எச்சரிக்க சீனா தவறிவிட்டது . 

சீனாவில் ஒவ்வொரு மாகாணங்களிலும் வைரஸ் பரவியும் சீனா அதை மறைத்துவிட்டது எனவே தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு சீன பொறுப்பேற்க  வேண்டுமென அந்நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன .  இந்நிலையில் ,  ஆஸ்திரேலியா வைரஸ் தோற்றம் குறித்து சீனா மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .  ஜெர்மனி சுமார் 130 மில்லியன் யூரோவை  சீனா இழப்பீடாக தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளது .  அதுமட்டுமின்றி சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவே  இனி தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன .  இதனால்  தங்கள் தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து வெளியேற்றி  இந்தியாவில்  நிர்மாணிக்க திட்டமிட்டு வருகின்றன.  ஏற்கனவே இந்தியா மீது புகைச்சலில் உள்ள சீனாவுக்கு இது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்  உலக அளவில்  சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மிகப்பிரபலமான காலனி நிறுவனமான காசா எவர்ஸ் ஜி.எம்.பி, தனது  தொழிற்சாலையை இந்தியாவில்  நிர்மாணிக்கப் போவதாக அறிவித்துள்ளது . 

காசா எவர்ஸ் ஜி.எம்.பியின் உரிமையாளர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .  குறிப்பாக  உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஐட்ரிக் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைத்து பயணிக்க  முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில அரசு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர் ,  அதன் ஒரு பகுதியாக காசா எவர்ஸ் ஜி.எம்.பி இந்த முடிவை எடுத்துள்ளது.   இதுகுறித்து தெரிவித்துள்ள உத்திர பிரதேச மாநிலத்திற்கான  சிறு குறு நிறுவனங்களுக்கான அமைச்சர் உதய் பஹான் சிங்.  இந்த புதிய தொழிற்சாலை தங்கள் மாநிலத்திற்கு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம் ,  இதன் மூலம்  கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள்  உருவாகும்  என தெரிவித்துள்ளார் .  இந்த பிராண்ட் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது,   உலகம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது . 
 

click me!