பார்த்து இருந்துக்கோங்க... தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. கடுமையாக எச்சரித்த ஆப்கன்..!

By Kevin Kaarki  |  First Published Apr 17, 2022, 11:57 AM IST

தாக்குதலில் சிக்கியவர்கள் தலிபான் மற்றும் தற்போதைய ஆப்கன் அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவி பொது மக்கள் ஆவர்.


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டதற்கு ஆப்கன் அதிகாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் தீவிரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தின் எல்லை பகுதியில் வசிக்கும் ஆப்கன் அரசு அதிகாரி மற்றும் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

ஐந்து குழந்தைகள் உயிரிழப்பு:

பாகிஸ்தான் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள், ஒரு பெண் கொல்லப்பட்டனர். ஒரு ஆண் காயமுற்றார். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ விமானம் தான் நடத்தியது என குனார் மாகாண தகவல் தொடர்பு பிரிவு இயக்குனர் நஜிபுல்லா ஹசன் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்ற தாக்குதல் ஆப்கானிஸ்தான் கோஸ்ட் மாகாண எள்லையின் அருகிலும் நடத்தப்பட்டது என மற்றொரு ஆப்கன் அதிகாரி தெரிவித்தார்.

எச்சரிக்கை:

"ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் சார்பில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கடுமையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம். எங்களின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." 

"இதுபோன்ற கொடூர தாக்குதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே விரோதத்தை ஏற்படுத்த வழி செய்கிறது. போர் தொடங்கினால் சரியாக இருக்காது. இது அந்த பகுதியில் சீரற்ற நிலையை ஏற்படுத்தி விடும்." என ஆப்கன் அரசு தெரிவித்து இருக்கிறது. 

கருத்து:

ஆப்கன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் ஆமிர் கான் முட்டாக்கி பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரியிடம் தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியதோடு, பாகிஸ்தான் செய்து இருப்பது ராணுவ விதிமீறல் என தெரிவித்து இருக்கிறார். 

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தனியார் செய்தி சேனல் தாக்குதல் பற்றிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. "தாக்குதலில் சிக்கியவர்கள் தலிபான் மற்றும் தற்போதைய ஆப்கன் அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவி பொது மக்கள் ஆவர். எங்களின் எதிரி யார் என்றே தெரியாது, நாங்கள் ஏன் குறி வைக்கப்படுகிறோம் என்றும் தெரியவில்லை." என கோஸ்ட் பகுதியில் வசிக்கும் ரசூல் ஜன் தெரிவித்தார். 

click me!