கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கும் எவர்கிரீன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 52 மாத சம்பளத்தை போஸாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கப்பல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்கி இருக்கிறது.
எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் கடல்வழி வணிகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த நிறுவனம் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் அதன் பங்குகள் விலை 2021ஆம் ஆண்டில் 250% அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் சுமார் 16.25 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அறிவிப்பினை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால், இந்த மிகப்பெரிய வளர்ச்சியை ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில் அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதாவது 5 வருடம் வரையான ஊதியத்தை போனஸாக அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தில் பணிபுரிய அனைத்து ஊழியர்களும் பயன் அடைந்துள்ளனர்.
பாதுகாப்பான முதலீட்டுக்கு தபால்துறை வழங்கும் பக்காவான சேமிப்புத் திட்டம்!
பணியில் சேர்ந்து ஓராண்டு மட்டும் நிறைவு செய்த ஊழியர்கள்கூட நான்கு ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாகப் பெற்றுள்ளனர். உதாரணமாக ரூ.45,000 சம்பளம் பெறும் ஊழியர், 60 லட்சம் ரூபாய் வரை போனஸ் பெறுவார். பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் மூத்த பணியாளர்கள் கோடிக்கணக்கில் போனஸ் தொகையை அள்ளிச் சென்றிருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவர்கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு உலக அளவில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மற்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இந்தச் செய்தியை அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த போனஸ் அறிவிப்பு எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆவலையும் பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிறுவனம் இப்போது மட்டுமின்றி 2021ஆம் ஆண்டிலும் 40 மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வாரி வழங்கிய ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் நீங்களும் சாப்பிடுறீங்களா? ஜாக்கிரதையா இருங்க! எச்சரிக்கும் ரசயான கலப்பட வீடியோ