சூப்பர் புளூ மூன் பார்க்க நீங்க ரெடியா? அபூர்வ வானியல் நிகழ்வு... ஆகஸ்ட் 30 இல் மிஸ் பண்ணாதீங்க!

By SG Balan  |  First Published Aug 28, 2023, 10:37 PM IST

ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, ​​இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. சில வானியல் நிகழ்வுகள் காரணமாக இந்த ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது.


ஆகஸ்ட் 30 ஆம் தேதி, வழக்கத்தை விட சற்று பெரியதாவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பௌர்ணமி நாட்கள் வருவதால், இரண்டாவது பௌர்ணமி தினத்தில் தோன்றும் நிலவு ப்ளூ மூன் எனப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முதல் முழு நிலவு ஆகஸ்ட் 1ஆம் தேதி தோன்றியது.

இரண்டாவது முழு நிலவை ஆகஸ்ட் 30ஆம் தேதி காணலாம். இந்த வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும். இந்த நாளில் சந்திரனின் அளவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வு  2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

ப்ளூ மூன் எப்போது தோன்றும், அதை எப்படி பார்ப்பது? என்று தெரிந்துகொள்ளும் முன்னால் ப்ளூ மூன் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

நிலவில் சீனாவின் ரோவரைச் மீட் பண்ணுமா இந்தியாவின் பிரக்யான் ரோவர்? நடக்கப்போவது என்ன?

விண்வெளியில் நடக்கும் சில வானியல் நிகழ்வுகளால், அமாவாசை, பௌர்ணமி, சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவை வானத்தில் தெரியும். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு இதே போன்ற ப்ளூ மூன் நிகழ்வு வானில் தென்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா இரண்டு முறை பௌர்ணமி நாட்கள் வந்ததிருப்பதால் இரண்டு முறை இந்த அரிய நிகழ்வைக் காண முடிகிறது.

ப்ளூ மூன் தோன்றவது ஏன்?

சந்திரன் 29.53 நாட்களில் பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றிவருகிறது. ஒரு வருடத்தின் 365 நாட்களில் சந்திரன் பூமியை 12.27 முறை சுற்றுகிறது. பூமியில் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு முழு நிலவு நாள் (பௌர்ணமி) இருக்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டிலும் நிலவு பூமியை 12 முறை முழுமையாகச் சுற்றிவந்த பின்பும் அந்த ஆண்டில் இன்னும் 11 நாட்கள் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூடுதல் நாட்கள் சேர்ந்து, அதன் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 22, மூன்று ஆண்டுகளில் 33 என அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு 2 அல்லது 3 வருடங்களுக்கும் ப்ளூ மூன் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இப்படித்தான் சில மாதங்களில் இரண்டு முறை பௌர்ணமி (முழு நிலவு) வருகிறது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி (புதன்கிழமை) தோன்றும் பவுர்ணமி நிலவு நீல நிலவாகக் காட்சி அளிக்கும். அப்போது நிலவு மிகப் பெரிய அளவிலும் மற்றும் மிகப் பிரகாசமான ஒளியுடனும் தோன்றும்.


 
நிலவு நீல நிறத்தில் தோன்றுமா?

நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம். ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.

ப்ளூ மூனை எங்கே பார்க்க முடியும்?

சூரியன் மறைந்த உடனேயே ப்ளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை ப்ளூ மூன் தோன்றும்போது, ​​ப்ளூ மூன் ஆகஸ்ட் 30 இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2026 இல் தான் தோன்றும்.

22 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகை! இதுதான் புருனே சுல்தான் குடியிருக்கும் உலகின் மிகப்பெரிய வீடு!

click me!