சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப இன்னும் தாமதம் ஆகும்: நாசா அப்டேட்

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவது குறைந்தது மார்ச் 2025 வரை தாமதமாகும் என்று நாசா புதன்கிழமை அறிவித்துள்ளது.

Sunita Williams' return to Earth to be further delayed: NASA sgb

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவது குறைந்தது மார்ச் 2025 வரை தாமதமாகும் என்று நாசா புதன்கிழமை அறிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட க்ரூ-10 மிஷன் விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு, அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தப் மிஷன் மார்ச் 2025 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலில் பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டது. புதிய டிராகன் விண்கலத்தில் செயலாக்கத்தை முடிக்க குழுக்களுக்கு நேரம் கொடுப்பதற்காக ஏவுதல் தாமதமாகியுள்ளது என்று நாசா கூறுகிறது. இருப்பினும், விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான குறிப்பிட்ட தேதியை நாசா தெரிவிக்கவில்லை.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணித்தனர். எட்டு நாள் பணிக்காகச் சென்ற அவர்களை அழைத்துச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப ஏற்தாக இல்லை. இதனால் சிறிது காலம் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இரண்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளனர். தொழில்நுட்ப ஆராய்ச்சி பணிகளுக்காக அங்கு சென்றிருக்கும் விஞ்ஞானிகளுக்கு அது ஒரு 'வீடு' போல வசதிகள் கொண்டது.

வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் அங்கு தனியாகவும் சிக்கிக்கொள்ளவில்லை. சக விண்வெளி வீரர்கள் பலர் அங்கேயே உள்ளனர். அவசரநிலை அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தைக் கைவிட வேண்டியிருக்கும். அதுபோன்ற சூழலில் விஞ்ஞானிகள் குழு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள காப்ஸ்யூல்களுக்கு இடம்பெயர்வார்கள்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image