சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என தெரிவித்துள்ளார்.
35 டிகிரிக்கு மேலான வெப்பநிலை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை கூறியுள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என அனைத்துக் கண்டங்களும் மோசமான பாதிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கோடைக்காலம் உச்சத்தை அடைந்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்தித்தனர் , அநில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளையும் அவர்கள் வெளியிட்டனர் . அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று தெரிவித்துள்ளனர் .அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவை பலவீன படுத்தி அழிப்பதாக தெரிவித்துள்ளனர்.
75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது சில நிமிடங்களில் வைரஸ் இறக்க கூடும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூரிய ஒளி 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இக்கும் போதும், 80 சதவீதம் அளவுக்கான ஈரப்பதமும் 18 மணிநேரம் என்ற கொரோனாவின் ஆயுட்காலத்தை பாதியாக குறைக்கிறது அதாவது 6 மணி நேரமாக குறைக்க வாய்ப்புள்ளது என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பில் பிரையன் தெரிவித்தார். சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என தெரிவித்துள்ளார். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா வைரஸ் பரவுவதை வேகமாக தடுக்கிறது குறிப்பாக சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் மற்றும் ஆல்கஹாலில் கொரோனா வைரஸ் 30 வினாடிகளில் அழிவதை பார்க்க முடிகிறது.
சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும் காற்று மண்டலத்திலும் அது வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது அதன் விரயம் குறையவும் செய்கிறது குறிப்பாக இந்தியாவில் கோடை காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளது, என தெரிவித்துள்ளனர். ஆனாலும் சமூக விலகளும் முகம் கவசம் அணிவதும் எந்த விதத்திலும் கைவிடக் கூடாது என பிரையன் எச்சரித்துள்ளார் இந் நிலையில் அமெரிக்க வானிலை சேனல் வெளியிட்டுள்ள தகவலில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது அறையில் அதிக வெப்பநிலையில் இந்த வைரஸ் உயிர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .