சீனா- அமெரிக்கா விஞ்ஞானிகளிடேயே உச்சகட்ட மோதல்.!! ஜி ஜின் பிங்கை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற துடிக்கும் ட்ரம்ப்.

By Ezhilarasan Babu  |  First Published Apr 24, 2020, 9:51 AM IST

வுஹான் ஆய்வுக்கூடத்திற்கு மட்டுமல்ல  இந்த வைரஸ் பற்றி அறியவும் அதன் தோற்றம் பற்றி அறியவும் அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவுக்குள் எந்த பகுதியிலும்  வர அனுமதி இல்லை என சீனா தெரிவித்துள்ளது. 


கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் நாட்டிற்குள் நுழைவதை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் தோன்றிய இடமான வுஹானுக்குச்  சென்று அந்த வைரஸ்  பற்றி முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்  தாங்கள் ஒரு தடுப்பூசியை விரைவாக தயாரிக்க அது உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  ஆனால் சீனா தங்களை திட்டமிட்டு தடுத்து வருகிறது என பாம்பியோ புகார் தெரிவித்துள்ளார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் சீனாவில் தோன்றிய அந்த வைரஸ் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  அமெரிக்காவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது .  இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் கொரோனாவால் முடங்கியுள்ளது

Latest Videos

பெரும் மனித பேரிழப்புடன்  அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது.   இந்நிலையில் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அமெரிக்கா சீனாவின் மீது திருப்பி உள்ளது . இதனால்  அமெரிக்கா சீனாவுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது . கொரோனா வைரசுக்கு  காரணம் சீனா தான் என அமெரிக்கா வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில்,   தங்கள் நாட்டு விஞ்ஞானிகளை சீனாவுக்குள்  அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது,  ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா மறுத்து விட்டது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ,  அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவுக்குள் சொல்வதை சீன விஞ்ஞானிகள் தடுத்து வருகின்றனர் . வுஹான் ஆய்வுக்கூடத்திற்கு மட்டுமல்ல  இந்த வைரஸ் பற்றி அறியவும் அதன் தோற்றம் பற்றி அறியவும் அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவுக்குள் எந்த பகுதிக்கும்  வர அனுமதி  இல்லை என சீனா தெரிவித்துள்ளது. 

ஆனால் இந்த வைரஸ் எங்கு தொடங்கியது என்று எங்களுக்கு நன்கு தெரியும் ஆனால் இதை நாங்கள்  துல்லியமாக கண்டுபிடிக்க வேண்டும் ,  இந்நிலையில் சீனாவிடமிருந்து எங்களுக்கு ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும் ,  தொற்று நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே உலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க முடியும் ,  ஆனால் சீனா அதை உலகிற்கு எச்சரிக்க தவறிவிட்டது . இந்த விவகாரத்தில் இனியாவது சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தவேண்டும்,  இல்லை என்றால் அந்நிறுவனம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார் .  உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் தோல்விகளையும் உணரத் தொடங்கியுள்ளனர்   இல்லையென்றால்  உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

.  

சீனாவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் வருவதன் மூலம் ஒரு சிறந்த தடுப்பூசியை உருவாக்க அது அமெரிக்காவுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதாலும்,  மருந்து வணிகத்தை  யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதாலும்  அமெரிக்க விஞ்ஞானிகளை சீனா நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறது  என பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார் .

 

click me!