காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு இயக்கங்களையும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல்களை நடத்துகிறது.
இதையும் படிங்க:- தப்பு தான் மன்னித்து விடுங்கள்... போலீஸாரிடம் சரண்டரான காஞ்சி கலெக்டர்..!
இந்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், அங்கு கலவரம் வெடிக்கக்கூடும் என கருதி ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளிடம் புகார் கூறியது. ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பல நாடுகள் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதனால் பதிலடி கொடுக்க பயங்கரவாத தாக்குதலே வழிமுறையாக இருக்கும் என கருதிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்டுள்ளது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி இருக்கிறார்கள்.
மசூத் அசாரின் தம்பி அப்துல்ரவுப் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பவல்பூரில் தங்கி இருந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு ஊடுருவ செய்து வருகிறான். அவனை ஐ.எஸ்.ஐ. உளவு படையினர் ராவல்பிண்டிக்கு அழைத்திருந்தனர். அங்கு வைத்து இந்த சதி திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பவல்பூருக்கு திரும்பிய அப்துல்ரவுப் தற்கொலை பயங்கரவாதிகளை தயார்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளான். மொத்தம் 7 தற்கொலை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பானிகால் அல்லது பிர்பண்டல் மலைப்பகுதி வழியாக ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜுரி அல்லது பூரி மாவட்டம் வழியாக உள்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது.
இதையும் படிங்க:- இப்படி ஒரு மோசமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை... வெளிப்படையாக ஒப்புக் கொண்ட துரைமுருகன்..!
பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் ஆனந்த்நாக் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகளும் நடந்து வருகின்றன. பக்ரீத் பண்டிகையான இன்றே அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்ப்பதால் பல இடங்களிலும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.
உடனடியாக அவர்கள் தாக்குதல் நடத்தாதபட்சத்தில் ஆகஸ்டு-15 ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒருவேளை காஷ்மீரை தாண்டி இந்தியாவின் மற்ற பகுதிகளில் நுழைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே காஷ்மீரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.