
நியூசிலாந்து நாட்டின் கார்டோனா என்ற பகுதியில் தான் இந்த வினோத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பகுதிக்கு வருகை தரும் இளம் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் ப்ராவை கழட்டி, அங்கே இருக்கும் முள்வேலியில் கட்டிவிட்டு செல்கின்றனர். இப்பொழுது அந்த முள்வேளியில் ஆயிரக்கணக்கான உள்ளாடைகள் இருப்பதை நம்மால் காண முடிகிறது.
கார்டோனா என்பது நியூசிலாந்து நாட்டின் மிகவும் பிரபலமான அதன் மத்தியில் இருக்கின்ற ஒரு பகுதி. இந்த பகுதி பிரபலமடைய ஒரு மிக முக்கியமான காரணம் இந்த பிரா வேலி தானாம். இந்த பகுதிக்கு வரும் பெண்கள் அந்த வேலியின் அருகே சென்று அங்கேயே தங்களுடைய உள்ளாடைகளை கழட்டி அவற்றை அந்த வேலிகளில் மாட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால் நியூசிலாந்து நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது அந்த ப்ரா வேலி. அதே போல பெண்கள் இப்படி தங்கள் உள்ளாடைகளை வேலிகளில் தொங்கவிட ஒரு காரணம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்கள் தான் தங்கள் உள்ளாடைகளை எடுத்து இந்த வேலியில் தொங்க விடுவதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் என்னவென்றால் தங்கள் மனதிற்கு பிடித்த மணமகன், தங்களுக்கு வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அப்படி தங்கள் உள்ளாடையை கழட்டி இவ்வாறு மாட்டினால், தாங்கள் நினைத்தது நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த வினோத சடங்குகள் எல்லாம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருக்கிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த வேளியில் நான்கு பிராக்கள் மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக அதைக் கண்ட பெண்கள் பலர் அங்கே வந்து தங்களுடைய உள்ளாடைகளை தொங்க விடுவதை வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இணையத்தில் இந்த தகவல் பரவிய நிலையில், இப்பொது உள்ளுர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெண்களும் இங்கு வந்த அந்த சடங்கை செய்கின்றனர்.