இன்னும் கூட இந்த கொடூரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை..!! தலையில் அடித்துக் கதறும் WHO...!!

By Ezhilarasan Babu  |  First Published Sep 26, 2020, 4:31 PM IST

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 72 லட்சத்து 44 ஆயிரத்து 184 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் இரட்டிப்பாகக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது உலக அளவில் 10 லட்சம் பேர் வைரசுக்கு உயிரிழந்த நிலையில், அது 20 லட்சமாக உயர வாய்ப்புள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதித்துள்ளன. இதுவரை உலக அளவில் 3.27 கோடிப்பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.94 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2. 41கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 

Tap to resize

Latest Videos

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 72 லட்சத்து 44 ஆயிரத்து 184 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 59 லட்சத்து  8 ஆயிரத்து 748 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 93 ஆயிரத்து 440 பேர் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக இந்தியாவில் 70 ஆயிரம் முதல்  90 ஆயிரம்  பேர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் இது கட்டுக்கடங்காமல் மக்களைக் கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. உயிரிழப்புகளும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. உலக அளவில் இதுவரை 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர  திட்ட இயக்குனர் மைக்கேல் ரியான் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:- உலக நாடுகள் வைரசுக்கு எதிராக எல்லா முயற்சிகளையும் எடுத்தும், கொரோனாவை தடுப்பதில் இன்னும் முழுமையாக வெற்றி  அடைய முடியவில்லை. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளாவிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், covid-19 ஆல் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு  மில்லியனாக உயரக்கூடும். உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது. இன்னும் கூட இந்த தொற்று நோய்க்கு எதிராக பல்வேறு நாடுகளும், மக்களும் ஒன்றிணையவில்லை என்றால் மேலும் 10 லட்சம் பேர் இறப்பதற்கான வாய்ப்பை தவிர்க்க முடியாது. மேலும் ஒரு மில்லியன் பேர் உயிரிழக்க நேரிடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து இறப்புகளை தவிர்க்க நாம் கூட்டாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படாவிட்டால் நிச்சயம் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

click me!