ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை, அவ்விரண்டு பகுதிகளுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக உள்ளது
கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டதுடன், காஷ்மீரை முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை இந்தியா திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சீனாவின் உதவியுடன், காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சினையாக முயற்சித்து அதில் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது. அதேபோல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டியக்கமான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டுமென நிர்பந்தித்து சவுதி அரேபியாவின் பகையை சம்பாதித்துள்ளது பாகிஸ்தான்.
இப்படி பல வகைகளில் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து பாகிஸ்தான் மூக்கு உடைபட்டு உள்ளநிலையில் ஆசியாவின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான சிஐசிஏவின் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 27 க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன, அதில் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியது, அதில் இந்தியா காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறித்துள்ளது எனவும், இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு தனது அதிருப்தியை பதிவு செய்தார். உலகளாவிய தளத்தை மீண்டும் பாகிஸ்தான் தனது பொய்யான கதைகளின் மூலம் தவறாக பயன்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை, அவ்விரண்டு பகுதிகளுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக உள்ளது. அது இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது. முதலில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை மறைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியாவின் சார்பில் அறிவுறுத்துகிறேன். அதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சிஐசிஏ போன்ற முக்கியமான மன்றங்களில் பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்ப கூடாது என்றார்.
இக்கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பாக காஷ்மீர் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பங்கு பெற்றார். காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்தை இந்தியா தனது உள் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதாக கூறுகிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கும் அதன் நேர்மைக்கும் எதிரானது. இத்தகைய நடவடிக்கை சிஐசிஏவின் கொள்கைகளுக்கு எதிரானது. என்றார். கூட்டத்தில் பல நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மன்றத்துடன் தொடர்புடைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் கடந்த வியாழக்கிழமை (சார்க்) பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார் அதில் பயங்கரவாத பிரச்சினையை அவர் எழுப்பினார். கடந்த 35 ஆண்டுகளில் சார்க் நிறைய முன்னேறி உள்ளது என்றார், இருப்பினும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இது பாதிக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தொடர்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளுக்கும் பயங்கரவாதம் தடையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாதத்தையும் அதை ஆதரிக்கும் சக்திகளையும் நாம் ஒன்றாக இணைந்து தோற்கடிப்பது அவசியம் என்றார். இக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரோஷியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.