தினமும் 1,600 கி.மீ. பயணம் செய்து ஆபீசுக்குப் போகும் ஸ்டார்பக்ஸ் சிஇஓ பிரையன் நிகோல்!

By SG BalanFirst Published Aug 22, 2024, 11:34 PM IST
Highlights

ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான நிக்கோலின் ஆண்டு சம்பளம் 1.6 மில்லியன் டாலர்கள். இது தவிர, செயல்திறன் அடிப்படையில் 3.6 மில்லியன் டாலர் முதல் 7.2 மில்லியன் டாலர் வரை போனஸ் வழங்கப்படும்.

தினமும் அலுவலகத்திற்குச் செல்ல 15 முதல் 20 கிலோமீட்டர் பயணம் செய்வதுகூட பலரை சோர்வடையச் செய்கிறது. ஆனால், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் நிகோல் தினமும் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 1600 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்.

50 வயதான பிரியம் நிகோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். ஆனால் ஸ்டார்பக்ஸ் தலைமையகம் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ளது. இதனால், தினமும் வெகு தொலைவில் இருந்து அலுவலகத்திற்கு வந்து செல்கிறார். இதற்காக கார்ப்பரேட் ஜெட் விமானம் ஒன்றை வைத்துள்ளார். 

Latest Videos

அவருக்கு வழங்கப்பட்ட பணி நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஸ்டார்பக்ஸ் 2023இல் இருந்து ஹைபிரிட் பணிக் கொள்கையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர் கார்ப்பரேட் ஜெட் விமானத்தை பயன்படுத்த அனுமதிக்கபடுகிறது. ஆனால், அவர் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சியாட்டில் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவேண்டும்.

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ரயில்வே வழித்தடம்!!

ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான நிக்கோலின் ஆண்டு சம்பளம் 1.6 மில்லியன் டாலர்கள். இது தவிர, செயல்திறன் அடிப்படையில் 3.6 மில்லியன் டாலர் முதல் 7.2 மில்லியன் டாலர் வரை போனஸ் வழங்கப்படும்.

நிக்கோல் இதுபோல தினசரி விமானத்தில் பயணித்து பணிபுரிவது முதல் முறையல்ல, 2018ஆம் ஆண்டு சிபொட்டில் (Chipotle) நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, ​​இதேபோன்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

சிபொட்டில் நிறுவனத்தின் தலைமையகம் முதலில் கொலராடோவில் இருந்தது. அப்போது நிக்கோலின் வீட்டில் இருந்து அலுவலகம் 15 நிமிட பயணத்தில் அடையும்படி இருந்தது. ஆனால் நிக்கோல் சிஇஓ ஆன பிறகு, அதன் தலைமையகம் கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. இதனால் அவர் விமான வசதியை பயன்படுத்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

நிறுவனங்களின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இத்தகைய வசதிகள் கிடைப்பது சகஜம். இந்த விஷயத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் அதிகமாக பேரம் பேசுவதும் வழக்கமாக உள்ளது.

13,000 க்கு மேல் ஆபாச வீடியோ எடுத்த இந்திய டாக்டர்! ஹார்டு டிஸ்க்கை பார்த்து அதிர்ந்த போலீஸ்!!

click me!