13,000 க்கு மேல் ஆபாச வீடியோ எடுத்த இந்திய டாக்டர்! ஹார்டு டிஸ்க்கை பார்த்து அதிர்ந்த போலீஸ்!!
பணிபுரிந்த மருத்துவமனையில் குளியலறைகள், உடை மாற்றும் அறை ஆகியவற்றில் ரகசிய கேமரா பொருந்தியிருக்கிறார். சொந்த வீட்டில் கூட மறைவாக கேமராக்களை வைத்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆயிரக்கணக்கான பெண்களை ஆபாசப் படம் எடுத்திருப்பதாக கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள 40 வயதான இந்திய மருத்துவர் ஒருவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 10 பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர் வைத்திருந்த ஒரு ஹார்ட் டிரைவில் 13,000 வீடியோக்களுக்கு மேல் இருந்ததாக போலீசார கூறியுள்ளனர். விசாரணையின் போது 15 மின் சாதனங்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
போலீசார் கூற்றின்படி, மருத்துவதுவரான உமர் ஏஜாஸ், இந்தியாவில் இருந்து வேலை விசாவில் 2011இல் அமெரிக்கா சென்றார். மிச்சிகனில் உள்ள சினாய் கிரேஸ் மருத்துவமனையில் வசித்து வந்த அவர் பின்னர் அலபாமாவின் டாசன் நகருக்குச் சென்றார். 2018இல் மிச்சிகனில் உள்ள ஓக்லாண்ட் கவுண்டிக்குத் திரும்பினார்.
11 வயதில் எருமைப் பால் விற்ற சிறுமி... 24 வயதில் பால் பண்ணை முதலாளி.. உழைப்பால் உயர்ந்த ஷ்ரத்தா!
கிளிண்டன் டவுன்ஷிப்பில் உள்ள ஹென்றி ஃபோர்டு மாகோம்ப் மருத்துவமனை, மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் அசென்ஷன் ஜெனிசிஸ் மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் தான் பணிபுரிந்த மருத்துவமனையில் குளியலறைகள், உடை மாற்றும் அறை ஆகியவற்றில் ரகசிய கேமரா பொருந்தியிருக்கிறார். சொந்த வீட்டில் கூட மறைவாக கேமராக்களை வைத்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆயிரக்கணக்கான பெண்களை ஆபாசப் படம் எடுத்திருப்பதாக கைது செய்யப்பட்டார்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கூட ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். சுயநினைவின்றி படுத்திருக்கும் நோயாளிகள், உறக்கத்தில் இருக்கும் பெண்கள் பலரின் ஆடைகளை அவிழ்த்து படம்பிடித்துள்ளார். ஹார்டு டிரைவ்கள் கைப்பற்றப்பட்டாலும், பல வீடியோக்களை கிளவுட் ஸ்டோரேஜில் அப்லோட் செய்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருகிறார்கள்.
மனைவியே புகார் கொடுத்ததை அடுத்து உமரின் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. ஓக்லாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம், மிச்சிகனில் ரோசெஸ்டர் ஹில்ஸில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியதில் பல ஹார்ட் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜியோவை அடிச்சுத் தூக்கும் ஏர்டெல் பேமிலி பேக்! ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிட்டட் பலன்கள்!!