இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு !! தேர்தல் ஆணையம் அதிரடி !!

Published : Sep 18, 2019, 10:53 PM IST
இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு !! தேர்தல் ஆணையம்  அதிரடி !!

சுருக்கம்

இலங்கையில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   

அண்டை நாடான, இலங்கை அதிபராக உள்ள, சிறிசேனவின், ஐந்தாண்டு பதவிக் காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இலங்கை தேர்தல் ஆணைய தலைவர், மஹிந்தா தேசப்ரியா, இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர்,16ல் நடைபெறவுள்ளது. . வேட்பு மனுதாக்கல் அக்,7-ம் தேதி துவங்குகிறது. என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்எல்பிபி கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார். 

இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!