பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ள தருணத்தை காண தான் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என பகிரங்கமாக எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் ஏற்படும் சுழல் உருவாகியுள்ளது. ஆனால் இந்தியா இவ்விவகாரத்தை மென்மையான கையாண்டு பதற்றத்தை தனிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது ஆனால் பாகிஸ்தான் இவ்விவகாரத்தை விடுவதாக தெரியவில்லை. இந்தியாவிற்கு எதிரான சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதுடன் . காஷ்மீர் விவகராத்தில் இந்தியாவிற்கு பாடம் புகட்டியே தீருவோம் என கொக்கரிக்கிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவர் பங்குக்கு இந்தியா பாகிஸ்தானுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என அறிவித்தார், அதை கடுமையாக எதிரித்த இந்தியா, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் மற்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்றதுடன், இந்தியா பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்வோம் இதில் மூன்றாவது நாடுகள் மூக்கை நுழைக்க தேவையில்லை என பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பிற்கு பகிரங்கமாக எச்சரித்தார். இந் நிலையில் வரும் 22 ஆம் தேதி ஹுஸ்டன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வும் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துள்ள ட்ரம்ப், ஹூஸ்டன் நகரில் நடைபெற உள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் பேரணியில் இந்திய பிரதமர் மோடியுடன் தானும் கலந்துகொள்ள உள்ளேன், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்றதுடன் , இந்தியா பாகிஸ்தானிடையே பதற்றம் தனிந்து இருநாட்டு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றார். ஐநா பொது குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ள தருணத்தை காண தான் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.