உச்சக்கட்ட பதற்றம்... அடுத்தடுத்து 8 குண்டுவெடிப்பு... இலங்கையில் அவசர நிலை பிரகடனம்..!

By vinoth kumarFirst Published Apr 21, 2019, 3:41 PM IST
Highlights

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈஸ்டர் பண்கையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்று உள்ளது. 

இந்த குண்டு வெடிப்பு சம்வங்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 187-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், மதியம் 2 மணியளவில் தெகிவாலா பகுதியில் (7-வது குண்டுவெடிப்பு) உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8-வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. இதில் பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை. இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 6 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார். 

click me!