சோசியல் மீடியா பிரபலம் ஹஸ்புல்லா அதிரடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூகவலைதளங்களில் இருப்பவர்களுக்கு ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) தெரியாமல் இருக்காது. எல்லா தளங்களிலும் இவரின் வீடியோக்களை பார்க்க முடியும். உருவத்தை பார்த்தால் 5 வயது குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார்.
ஆனால் அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில் வசித்து வருகிறார். ஜீன் குறைபாடு காரணமாக அவரது உருவம் பார்ப்பதற்கு குழந்தைபோல் இருக்கிறது. ஹஸ்புல்லாவின் உயரம் மற்றும் குரலும் குழந்தைபோலவே உள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, தாகெஸ்தானில் ஹஸ்புல்லா அவரது நண்பர்கள் சிலருடன் போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டார். ஹஸ்புல்லா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் போக்குவரத்து விதிகளை மீறியதால் கைது செய்யப்பட்டனர். சாலையில் செல்லும் மற்ற ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
போக்குவரத்து சட்டங்களை மீறியதற்காக ஹஸ்புல்லாவையும் அவரது நண்பர்கள் சிலரையும் தாகெஸ்தானில் போலீசார் கைது செய்தனர். தாகெஸ்தானில் காவலில் வைக்கப்பட்ட அவர்கள், நிர்வாக விதிமீறல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர். மேற்படி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?