சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் போட்டியிடுகின்றனர்
பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சொங் பாங் (Chong Pang), மார்சிலிங்கில் (Marsiling) உள்ள வாக்குச்சாவடி நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இயந்திர கோளாற்றைச் சரிசெய்யும் வரை மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர. சுமார் அரை மணி நேரம் கழித்து சொங் பாங்கில் மக்கள் வாக்களித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்ற பல இடங்களில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.