"இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான்" - சிங்கப்பூர் அரசு அதிரடி!!

First Published Aug 1, 2017, 10:46 AM IST
Highlights
singapore govt says that tamilians are real indians


சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியை சேர்க்க வேண்டும் என போராடிய வட இந்தியர்களிடம், எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான் என்று அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு இது வயிற்றெரிச்சலையும், நமைச்சலையும் கொடுத்து வருகிறது.

இதையடுத்து சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி.இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.

எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிராகரித்த சிங்கப்பூர் அரசு, நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப்போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த்தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள் தான் என தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான் என்று கூறி வட இந்தியர்களின் மூக்கை உடைத்துள்ளது..

அந்த சகோதர உணர்விற்காகத்தான் இங்கு தமிழையும் ஆட்சிமொழியாக வைத்துள்ளோம் என்று  கூறி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

click me!