முற்றுகிறது மோதல்!! - 755 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்ய அதிபர் உத்தரவு!!

 
Published : Jul 31, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
முற்றுகிறது மோதல்!! - 755 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்ய அதிபர் உத்தரவு!!

சுருக்கம்

putin orders to dismiss 755 american embassy staffs

ரஷ்யாவில் இருந்து 755 அமெரிக்க தூதரக அதிகாரிகள் செப்டம்பருக்குள் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருந்தார்கள். இதனால் ரஷ்யா அமெரிக்கா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவில் பணியாற்றி வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேரை செப்டம்பருக்குள்வெளியேற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், வரும் செப்டம்பருக்குள் அமெரிக்காவில் பணியாற்றும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. 

இந்தநிலையில், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த  அதிபர் புடின் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தூதரக மற்றும் தொழில்நுட்ப வல்லுநனர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில் புடினின் இந்த அறிவிப்பு அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!