Singapore : சிங்கப்பூரில் தனது போன் பழுதான நிலையில், அதை சர்வீஸ் செய்ய ஒரு நபரிடம் அதை கொடுத்துள்ளார் ஒரு சிங்கப்பூரார். ஆனால் அதை சர்விஸ் மட்டும் செய்யாமல், பிற பலே வேலைகளில் ஈடுபட்ட ஆசாமி தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
வெளியான நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த சம்பவம் கடந்த ஜனவரி 11ம் தேதி 2021ம் ஆண்டு, சிங்கப்பூரில் உள்ள Bugis சந்திப்பில் உள்ள ஹைடெக் மொபைல் என்ற கடையில் நடந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டுள்ள லூ என்பவர் அந்த கடையில் தான் மொபைல் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
2021ம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, பெயர் குறிப்பிடப்படாத அந்த வாடிக்கையாளர் (30 வயது நபர்), தற்செயலாக உடைந்து போன தனது போனை ரிப்பேர் செய்ய எண்ணியுள்ளார். ஆனால் அவருக்கு வேலைகள் அதிகமாக இருந்த நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் அவருக்கு பதிலாக அவருடைய போனை அந்த குறிப்பிட்ட கடையில் ரிப்பேர் செய்ய கொடுத்துள்ளார். மேலும் ரிப்பேர் செய்து முடித்த பிறகு சரிபார்ப்பதற்காக கடவு சொல்லையும் அவரிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளார் அந்த ஆசாமி.
கம்ப்யூட்டரே பொறாமைப்படும்.. உலகின் மிகச்சிறந்த இந்த கையெழுத்து யாருடையது தெரியுமா?
மொபைல் போனை சரி செய்து, அது சரியாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்த பிறகு அத்தோடு நிறுத்தாமல் அந்த போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை படித்துப் பார்க்க துவங்கியுள்ளார் அந்த நபர், ஒரு கட்டத்தில் அந்த போனில் உள்ள டெலிகிராம் செயலியை திறந்த அவர், அதில் அந்த பெண்ணும் அவரது வருங்கால கணவரும் பேசிக் கொண்ட விஷயங்கள் குறித்து பார்த்துள்ளார்.
அந்த telegram மெசேஜ் படிக்க துவங்கிய நிலையில் அதில் இருவரும் பகிர்ந்து கொண்ட சில ஆபாச அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதை கண்டு உடனடியாக அதை தனது செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி பெரும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 40 புகைப்படங்களை அவர் தனது செல்போனுக்கு அனுப்பி கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கின்றது.
இறுதியில் அந்த போனில் ஜாக்கி என்று தனது பெயரை சேவ் செய்துவிட்டு அந்த போனை மறுநாள் அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் தனது telegram செயலியில் ஒரு புதிய நம்பர் பதிவு செய்யப்பட்டிருப்பது அறிந்து சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்ட அந்த நபர், புதிதாக ஜாக்கி என்று பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிற்கு போன் செய்துள்ளார்.
ஆனால் தொடர்ச்சியாக அதை கட் செய்த அந்த ஆசாமி தான் சிக்கிக் கொண்டதை எண்ணி அதிர்ந்து போய் உள்ளார். ஒரு கட்டத்தில் போன் ரிப்பேருக்கு சென்ற இடத்தில் தான் ஏதோ கோளாறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த நபர். தகவல் கிடைக்கப்பெற்ற சிறிது நேரத்தில் லூ என்ற அந்த செல்போன் கடை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் இது போன்ற சில சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்த நிலையில் அவருக்கு மூன்று மாதம் மற்றும் 6 வார சிறு தண்டனை வழங்கி கடந்த ஆக 29ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்திய சிங்கப்பூர் இடையேயான உறவு போற்றத்தக்கது! - அரிசி ஏற்றுமதிக்கு சிறப்பு அனுமதி அளித்த இந்தியா!