இந்தியா கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்...!! வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கதறும் சீனா..!!

By Ezhilarasan Babu  |  First Published Sep 4, 2020, 6:04 PM IST

இந்தியா அதிரடியாக  சீனாவின் 224 செயலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்திருப்பது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை காரணம்காட்டி 224 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா இந்த அதரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 3 மாதத்திற்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீனப் படையினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதையடுத்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் மேகம் சூழ்ந்தது, எப்போது வேண்டுமானாலும்  போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது,  இதனிடையே இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டன.

Tap to resize

Latest Videos

அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளை பின்வாங்கின ஒரு சில இடங்களில் இருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும், விரல் பகுதி மற்றும் டெப்-சாங்  மற்றும் கோக்ரா  உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீனா படைகளை பின் வாங்க மறுத்து வருகின்றன. மேலும் அங்கு அமைத்துள்ள கூடாரங்களை அது அதிகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது, பல இடங்களில் இருந்து படைகள் பின்வாங்கினாலும், ஒரு சில இடங்களில் இருந்து பின் வாங்க மறுத்து வருகிறது. இது குறித்து இந்தியா பலமுறை சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாக ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கொரோனா வைரஸில் சிக்க வைத்துவிட்டு தான்மட்டும் தப்பித்துக் கொண்ட சீனா, வேகவேகமாக பொருளாதாரத்தின் முன்னேறுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் அண்டை நாடுகளின் எல்லைகளையை ஆக்கிரமிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால்  சீனாவுக்கு பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதே போல் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும்  டிக்டாக் உள்ளிட்ட 59  சீன செயலிகளுக்கு ஏற்கனவே இந்தியா தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை, பப்ஜி வீ சாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மொத்தத்தில் இதுவரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. 

எல்லையில் சீனாவின் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா டிஜிட்டல் தாக்குதல் நடத்தியிருப்பது சீனாவை கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்கா சீனா செயலிகளை தடை விதிக்கப் போவதாக கூறி வரும் நிலையில், இந்தியா அதிரடியாக  சீனாவின் 224 செயலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்திருப்பது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீன வர்த்தக துறை அதிகாரி  காவ் பெங் இந்தியா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா சீன நிறுவனங்கள் மீது பாராபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பையும், வளர்ச்சியையும் பராமரிக்க இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று தாங்கள் நம்புவதாக அவர் கூறியுள்ளார். 

 

click me!