தாய்லாந்து நகரம் மேற்கு பகுதியில் உள்ளது காஞ்சனாபூரி. இந்த இடத்தில் உள்ள புத்தர் கோவிலை "புலிக்கோவில்" என்றே அழைப்பார்கள். இந்த கோவில் வனப்பகுதியில் ஏராளமான புலிகள் இருக்கின்றன. புலி குட்டிகளும் அதிகளவில் தென்படும்.

இந்த கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் புலிக்குட்டிகளை பார்த்து ஆரவாரமாக போட்டோ எடுத்துக் கொள்வதும் பார்த்து ரசிப்பதுவுமாக இருப்பார்கள். இதனாலேயே அவ்வப்போது சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள். சுற்றுலா பயணிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு புலிக்குட்டிகளை விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது கோவிலில் இருந்த குளிர்சாதன பெட்டியில் பல புலி குட்டிகளின் சடலங்கள் கண்டு அதிர்ந்து போயுள்ளனர் அதிகாரிகள். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து 147 புலிகள் நீக்கப்பட்டது. அங்கிருந்து அருகே உள்ள பகுதியான ரட்சபுரி மாகாணத்தில் இனப்பெருக்க நிலையங்களுக்கு கொண்டு சென்று பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொன்றாக இறக்க நேர்ந்துள்ளது. அதில் 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்து விட்டதாகவும், மீதம் 61 புலிகள் மட்டும் உயிருடன் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.