வானில் இருந்து விழுந்த கடல்வாழ் உயிரிகள்…! சீனாவில் பெய்த விநோத மழை…!

 |  First Published Jun 16, 2018, 11:58 AM IST
sea creatures fall from sky on china



மழை பெய்யும் போது தண்ணீர் விழுவது தான் வழக்கம். ஆனால் சீனாவில் ஒரு விநோத மழை பெய்திருக்கிறது. சீனாவில் உள்ள ”ஷேண்டாங்” மாகாணத்தில் ”கியுங்டோ” எனும் பகுதியில் தான் இந்த விநோத சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் அங்கு புயலுடன் கூடிய மழை பெய்தது. அந்த மழையின் போது வானில் இருந்து பல விநோத உயிர்கள் நிலத்தில் விழுந்திருக்கின்றன.

Latest Videos

அவற்றை உற்று நோக்கிய போது தான் அவை கடல் வாழ் உயிரினங்கள் என தெரியவந்திருக்கிறது.  மீன், நட்சத்திர மீன், இறால் என பல்வேறு உயிரினங்களும் எப்படி இங்கு வந்தன? என அதிர்ந்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தற்போது அந்த புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. புயலின் போது கடல் வாழ் உயிரினங்கள் புயலுக்குள்ன் சிக்கி மேலெழும்பி இருக்கின்றன. அவை தான் அந்த புயல் மழையாக பெய்த போது, இங்கு விழுந்திருக்கின்றன என வானியிலாளர்கள், இந்த சம்பவம் குறித்து விவரித்திருக்கின்றனர். அதன் பிறகே அங்கு பதட்டம் குறைந்திருக்கிறது.. ஆனாலும் இது ஏதேனும் துர் சகுனமோ? என்று இன்னமும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

click me!