Saudi Arabia:சவுதி அரேபியா அரசு ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நேற்று நிறைவேற்றியது. ஆனால், எந்த முறையில் தண்டனையை நிறைவேற்றியது குறித்து தெரிவிக்கவில்லை.
சவுதி அரேபியா அரசு ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நேற்று நிறைவேற்றியது. ஆனால், எந்த முறையில் தண்டனையை நிறைவேற்றியது குறித்து தெரிவிக்கவில்லை.
மரண தண்டனை
கடந்த 2021ம் ஆண்டு 67 பேருக்கும், 2020ம் ஆண்டு 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த 81 பேரில் 7 பேர் ஏமினி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர்கள், 37-க்கும் மேற்பட்டோர் சவுதிஅரேபிய குடிமக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகமான எண்ணிக்கையில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் இது பெரியதாகும்.
இதுகுறித்து சவுதி அரேபிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது, மதத்துக்கு மாறாக நம்பிக்கை கொண்டிருத்தல், அப்பாவிகள், பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்தல், கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதில் பலர் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, ஹவுதி போன்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சவுதிஅரேபியாவைச் சேர்ந்த 37 பேர் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸாரைக் கொலை செய்த குற்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் அமைப்பு
சவுதி அரேபியா ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை வழங்கியதற்கு மனித உரிமைகள் அமைப்பு கண்டித்துள்ளது. அரசை விமர்சித்தால்கூட மரண தண்டனை அளிக்கும் சவுதி அரேபியாஅரசு, அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் கொலை செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், எந்தவிதமான மனித உரிமை மீறல்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மனித உரிமைஆர்வர்கள் குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி அரேபிய அரசு, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவே இந்த தண்டனை வழங்கப்பட்டது.