அதிர்ச்சி செய்தி ! ஈஃபிள் டவர் மீது தாக்குதல்.. உக்ரைன் அரசு வெளியிட்ட 'அதிர்ச்சி' வீடியோ !!

By Raghupati R  |  First Published Mar 13, 2022, 6:13 AM IST

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவில் விமான தாக்குதல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 


நீடிக்கும் போர் :

ரஷியாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கூறி உள்ளார். நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் செய்யமாறு இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட்டை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘உக்ரைன் தலைநகர் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசவும், நகரத்தை கைப்பற்ற குடியிருப்புவாசிகளை கொல்லவும் ரஷியா முயற்சி மேற்கொள்ளும். 

அதுவே அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் வரட்டும். அவர்கள் குண்டுவீச்சை நடத்தி முழு பிராந்தியத்தின் வரலாற்று நினைவகத்தையும், கீவின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால், அவர்கள் கீவில் நுழைய முடியும்’ என்றார்.

ஈஃபிள் டவர் :

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில்  பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் முன் ஒரு பெண் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

திடீரென அப்பகுதியில் பயங்கரமான ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஈஃபிள் டவர் விழுந்து நொறுங்குகிறது. அங்கே உள்ள மக்கள் பயத்தில் ஓடுகிறார்கள். மற்றுமொரு ஐரோப்பிய நாட்டின் தலைநகருக்கு இந்த நிலைமை ஏற்படுவதை யோசித்து பாருங்கள். இது நடந்துவிட கூடாது என்று தான் நாங்கள் எண்ணுகிறோம். அதனால் உக்ரைன் வான் எல்லைகளை மூடுவதாக அறிவியுங்கள். இல்லையெனில், உக்ரைனுக்கு வான் போர் வீரர்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் வீழ்ந்தால் நீங்களும் வீழ்ந்ததாகவே அர்த்தம் என்று அந்த வீடியோவில் எழுதப்பட்டுள்ளது.

click me!