
உலகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 2027க்குள் மின்னணு பரிவர்த்தனைகள் இரட்டிப்பு அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சூழலில் சவுதி அரேபியா, அரசின் “விஷன் 2030” திட்டத்தின் ஒரு பகுதியாக, பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 2025க்குள் நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் குறைந்தது 80% மின்னணு முறையில் நடைபெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 அன்று ரியாத்தில் நடைபெற்ற Money20/20 சர்வதேச ஃபின்டெக் மாநாட்டில் சவுதி அரேபியாவின் மத்திய வங்கி (SAMA) கூகுள் பே சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த சேவையின் மூலம், Mada டெபிட் கார்டுகள், விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற சர்வதேச கார்டுகளை கூகுள் வாலட்டில் இணைத்து, ஸ்மார்ட்போன்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் மூலம் தொடுதல் இல்லா பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இது கடைகள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து துறைகளில் பண பரிமாற்றத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.
அதே நிகழ்வில், சவுதி அரேபியா ஆண்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Alipay+ சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் தங்களது பிராந்திய வாலெட்டுகள் (Alipay, WeChat Pay, GCash, KakaoPay, TrueMoney) மூலம் நேரடியாக பரிவர்த்தனை செய்யலாம். நேரடி டிஜிட்டல் பரிமாற்றம் இல்லாமல் நாணய மாற்றச் சிக்கல்கள், சுற்றுலாப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
SAMA ஆளுநர் அய்மன் அல்-சயாரி கூறினார், “2022ல் 82 ஃபின்டெக் நிறுவனங்கள் இருந்தன, தற்போது 281 ஆக உயர்ந்துள்ளது” என்று கூறினார். சவுதி அரேபியா குறுகிய காலத்தில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஃபின்டெக் சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2024ல் நாட்டின் சில்லறை பரிவர்த்தனையில் 79% மின்னணு முறையில் நடத்தப்பட்டது, மேலும் ஃபின்டெக் முதலீடு 9 பில்லியன் ரியால்கள் (சுமார் 2.39 பில்லியன் டாலர்)ஐ தாண்டியுள்ளது.
சர்வதேச ஃபின்டெக் நிபுணர்கள் கூகுள் பே மற்றும் அலிபே+ அறிமுகம், நாட்டின் இ-காமர்ஸ் சந்தை, சிறு வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வங்கி மற்றும் நிதித்துறையில் போட்டி அதிகரித்து வரும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
“விஷன் 2030” திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார சக்தியாக மாற விரும்புகிறது. ரியாத்தில் அறிவிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள், சவுதி அரேபியாவை வளைகுடா பிராந்தியத்திலும், உலகளாவிய ஃபின்டெக் வரைபடத்திலும் முக்கிய மையமாக உருவாக்குவதாக இருக்கிறது.