ரஷ்யாவை காத்திருந்து பழி தீர்த்த கொரோனா..!! உத்தரவை மீறினால் 7 ஆண்டு சிறை , எச்சரித்த புடின்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 11, 2020, 5:07 PM IST

இத்தனை நாட்களாக மௌனமாக  வைரசை எதிர்கொண்டு வந்த ரஷ்யா தற்போது அதன் தீவிரத்தை உணர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது . 
 


கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் பரப்பினாலோ அல்லது அரசு விதித்துள்ள வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறினாலோ  சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது .  உலகம் முழுவதும் கொரனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ரஷ்யா கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,000 ஆக உயர்ந்துள்ளது இந்த வைரசுக்கு அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

Latest Videos

சீனாவில் இந்த வைரஸ் பரவ தொடங்கியவுடன் தனது எல்லைகளை மூடிய ரஷ்யா அதுமுதல் தங்கள் நாட்டு விமான சேவைகளையும் நிறுத்தியது,  இதனால் மற்ற நாடுகளில் ஊடுறுவியது போல, ரஷ்யாவில் கொரோனாவால் அவ்வளவு எளிதில் நுழைய முடியவில்லை, இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து ரஷ்யா ஜப்பான் போன்ற நாடுகள் ஒரளவுக்கு தங்களை தற்காத்துக் கொண்டன, ஆனாலும் ஒன்று இரண்டு பேருக்கு பரவிய அந்த வைரஸ் அங்கு மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.   ஆம்...  ரஷ்யா இந்த வைரஸை முற்றும் முதலுமாக துடைத்தெறிய எவ்வளவோ திட்டங்களை வகுத்தபோதும் சைலண்டாக வளர்ந்த கொரோனா தற்போது நாடு முழுக்க வியாபித்திருக்கிறது.  இதுவரை  13 ஆயிரத்து 584 பேரை அந்த வைரஸ் பீடித்துள்ளது ,  இத்தனை நாட்களாக மௌனமாக  வைரசை எதிர்கொண்டு வந்த ரஷ்யா தற்போது அதன் தீவிரத்தை உணர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது . 

 இதுவரையில் இந்த வைரசுக்கு 106 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் ,  தற்போது ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.  இந்நிலையில் மற்ற நாடுகளைப் போல ரஷ்யாவும் ஊரடங்கு  நடவடிக்கை கையில் எடுத்துள்ளது ,  ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை முழு அடைப்புக்கு அழைப்பு  விடுத்துள்ளது .  மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் அனைத்து வணிக வளாகங்களும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.  தொழிற்சாலைகளை உடனே மூட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உற்பத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் மளிகை கடைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறந்து இருக்க வேண்டும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு  அனுமதி போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டிலேயே பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .  இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என சுமார் 170 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது , கூடுதல் மருத்துவ படுக்கைகளை அமைத்து  மருத்துவ சிகிச்சை முறைகளை 24 மணி நேரமும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போக்குவரத்து விதிமுறைகளையும் மாற்றி அறிவித்துள்ளார்,   டிஜிட்டல் பஸ் பாஸ் முறையை அறிமுகப்படுத்தி அத்தியாவசிய அவசரம் கருதி உரியவர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள  அதிபர் புடின் ,  தவறான தகவல் பரப்புவோருக்கு  ஐந்தாண்டுகள்  சிறை தண்டனையும் ,  தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுவோருக்கு  ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.  அமெரிக்காவுக்கு இணையான வல்லரசான ரஷ்யா இந்த வைரசை எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  
 

click me!