உக்ரைன் நாட்டில் ஷாப்பிங் மால் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் பலியாகினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர்தொடுத்து வரும் ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் மக்கள் அதிகம் கூடியிருந்த ஷாப்பிங் மால் ஒன்றில் ரஷ்ய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைத் தாக்குதலில் ஷாப்பிங் மால் தீப்பற்றி எரிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில் 16பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்பகுதிவாசிகளும் தீயணைப்பு படையினருடன் சேர்ந்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஜெர்மனியில் கூடுகிறது ஜி7 உச்சி மாநாடு… உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… யாரை மிரட்டுகிறார் புடின்?
ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு ஜி-7 உச்சி மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஹெலன்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போரை குளிர்காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியுடன் ஜி7 நாடுகளின் தலைவர்கள்… உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஒரு கிளிக்!!
ஜெர்மனியில் பிரான்ஸ் அதிபருடன் தேநீர்… வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்!!