ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் அருந்திக் கொண்டே உரையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் அருந்திக் கொண்டே உரையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் ஜனநாயகம் போன்ற விவகாரங்களில் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் அதன் பங்காளிகளுடன் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார் என கூறப்படுகிறது. குரூப் ஆஃப் செவன் (G7) என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அரசுகளுக்கிடையேயான அரசியல் குழுவாகும்.
மேலும் படிக்க: ஓடி வந்து கைக்கொடுத்த அமெரிக்கா அதிபர்… மாஸ் காட்டிய பிரதமர் மோடி… ஜெர்மனியில் சுவாரஸ்யம்!!
Boosting engagement with a valued partner.
PM and President held talks on the sidelines of the G-7 Summit. They discussed the full range of friendship between India and South Africa including ways to boost trade and people-to-people ties. pic.twitter.com/lFYtm4JoDy
உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் நெருக்கடியின் மீது கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுகிறது. ஜெர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை ஏற்று தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் என்ற அல்பைன் கோட்டையில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த உச்சி மாநாட்டை G7-ன் தலைவராக ஜெர்மனி நடத்துகிறது.
மேலும் படிக்க: பிரதமர் மோடியுடன் ஜி7 நாடுகளின் தலைவர்கள்… உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஒரு கிளிக்!!
ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் பிரதமர் , பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தேநீர் அருந்திக்கொண்டே உரையாடினர். pic.twitter.com/IbIXwQsJQa
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதனிடையே ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி7 நாடுகளின் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான முழு அளவிலான நட்புறவு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் மக்களிடையேயான உறவுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் தேநீர் அருந்திக் கொண்டே உரையாடினர்.