காதலியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த காதலன் அதிரடி கைது..!

Published : Jul 31, 2019, 11:30 AM IST
காதலியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த காதலன் அதிரடி கைது..!

சுருக்கம்

இளம்பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் புகழ் எகெடெரினா கரக்லொனாவா (24). 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள எகெடெரினா தொடர்ந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். ஆனால், சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் எகெடெரினா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், எகெடெரினா கொலை சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சியின் படி கொலை நடந்த அன்று எகெடெரினாவின் காதலர் சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது. புதிய காதலருடன் தன் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முன்னாள் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!