Ukraine-Russia War: பற்றி எரியும் காவல்துறை அலுவலகம்... உக்ரைனின் கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா!!

By Narendran S  |  First Published Mar 2, 2022, 4:34 PM IST

உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. 


உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில்தான் ரஷ்யா இதுவரை கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது.

Tap to resize

Latest Videos

அங்கு கடந்த 6 நாட்களாக கடுமையான ஏவுகணை தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்களை நடத்தி உள்ளது. உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் பல உதவி வருகின்றன. பல நாடுகள் பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கி உள்ளன. அதேபோல் ஏவுகணைகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றையும் உக்ரைனுக்கு 30க்கும் அதிகமான நாடுகள் வழங்கி உள்ளன. மேலும் உலக வங்கி தொடங்கி அமெரிக்கா வரை பல நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாக பல மில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து இன்றும் 7வது நாளாக உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள காவல்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அலுவலகம் பற்றி எரியத்தொடங்கியது. இதனிடையே உக்ரைனுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!