அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு..!! கமலா ஹாரிஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2020, 12:19 PM IST
Highlights

தேர்தல் தேதி நெருங்க நெருங்க அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. அதிபர் டிரம்ப் ஜோ பிடனையும், பிடன் ட்ரம்பையும் என மாறி மாறி தாக்கி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது இருவருமே ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்றும், அது தங்களது கட்சிக்கு மிகப் பெரிய தீங்கை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்குகிறார். அதே போல் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. அதிபர் டிரம்ப் ஜோ பிடனையும், பிடன் ட்ரம்பையும் என மாறி மாறி தாக்கி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது இருவருமே ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலையீடு அல்லது சதிவேலை இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்சியினர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் ரஷ்யாவை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டது குறித்து எனக்கு ஒரு தெளிவான கருத்து உள்ளது. நான் செனட் புலனாய்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டுள்ளோம் என அவர் கூறினார். அப்போது ரஷ்யாவின் தலையீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு என்பது மறுக்க முடியாது. 2020 ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருக்கும் என்றும் அதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நான் கருதுகிறேன் எனக் கூறினார். மேலும் அது ரஷ்ய தேர்தலை பாதிக்கும் என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

 

click me!