இந்தியாவை கொடுமைப்படுத்த நினைக்கும் சீனாவின் எண்ணம் ஈடேறாது..!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி..!!

By Ezhilarasan Babu  |  First Published Sep 7, 2020, 11:49 AM IST

ஆனால் சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா அது போன்ற நடவடிக்கையில் வலுவாகவே ஈடுபடுகிறது எனக் கூறியுள்ளார். 


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்தியாவை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற சீனாவின் முயற்சி ஈடேறாது என கூறியுள்ளார். இது சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய-சீன எல்லையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற  சூழல் நிலவியது. ஆனால் இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டன. 

Tap to resize

Latest Videos

குறிப்பாக சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும், இன்னும் பல பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற மறுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்து தோல்வி கண்டுள்ளது. இதனால் மீண்டும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது என கூறியுள்ளார். அவர் இதனை தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் அவரின் கருத்தை புறக்கணித்து வருகின்றன. 

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீனா, இந்தியாவை கொடுமைப்படுத்துவதாக நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் அது நடக்காது என்று நம்புகிறேன். ஆனால் சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா அது போன்ற நடவடிக்கையில் வலுவாகவே ஈடுபடுகிறது எனக் கூறியுள்ளார். இரு நாட்டு பிரச்சனையில் ஏதாவது செய்ய முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன் ஆனால் எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார். இந்தியாவை கொடுமைப்படுத்தும் சீனாவின் முயற்சி எடுப்படாது என கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

click me!