உக்ரைனில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஷ்கி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஷ்கி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து இன்று 15 ஆவது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனில் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற பகுதிகளை குறிவைத்து ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் ஏராளமான பகுதிகள் உருகுலைந்துள்ளன.
மேலும் இந்த போரில் இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உக்ரைனில் இருந்து பலர் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது அக்கிரமம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் இந்த செயலுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் இது காட்டுமிராண்டித்தனம் என வெள்ளை மாளிகை ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இது சீரழிவு என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் ரஷ்யாவை சாடி உள்ளனர். மேலும் இதுக்குறித்து பேசிய ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர், சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என தெரிவித்துள்ளார்.