உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா..! தன் மகளுக்கு போட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அதிபர்

By karthikeyan VFirst Published Aug 11, 2020, 3:49 PM IST
Highlights

உலகையே உலுக்கிவரும் கொரோனாவிற்கு முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவிற்கு சரியான மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ இல்லாததால், உலகமே இந்த வைரஸை எதிர்கொள்ள திணறியது. சரியான மருந்து இல்லையென்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அந்த வைரஸின் தாக்கத்திற்கு ஏற்ப சிகிச்சையளித்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக்கொள்ளும் என்பதால், தடுப்பூசி கண்டறிவதுதான் கொரோனாவிலிருந்து மீள ஒரே வழி என்பதால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா என அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் வளர்ந்த நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கினர். 

இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி, விலங்குகள் மீதான சோதனை, மனிதர்களின் மீதான சோதனை என அனைத்துக்கட்ட சோதனைகளிலும் நல்ல பலனளித்து சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியாக ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். 

மக்களுக்கு இந்த தடுப்பூசியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தனது சொந்த மகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டு சோதித்ததாகவும் தனது மகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுபிடித்து முதல் நாடாக, கொரோனா தடுப்பூசியை பதிவு செய்திருப்பது உலக நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 
 

click me!