பிரிட்டன் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரிட்டனுக்காகவும், கன்சர்வேட்டிவ்(பழமைவாதக்கட்சி) இரவுபகலாக உழைப்பேன் என்று இந்திய வம்சாவழி வேட்பாளர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரிட்டனுக்காகவும், கன்சர்வேட்டிவ்(பழமைவாதக்கட்சி) இரவுபகலாக உழைப்பேன் என்று இந்திய வம்சாவழி வேட்பாளர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிசி டிரஸ் இடையே பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் பலகட்டங்களாக பிரச்சாரம் செய்தநிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாய்கிழமை முடிந்தது.
கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 1.60 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியநிலையில் வெள்ளிக்கிழமை வரை வாக்களிக்கலாம்.
புதிதாக பிரதமராக வருபவருக்கு பிரிட்டனின் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உயர்வு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் லிசி டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஈடுபட்டனர்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்
அதில் ரிஷி சுனக் பேசுகையில் “ ஒரு மனிதர் வளர்வதற்கும், குடும்பத்தை உருவாக்கவும், தொழில் செய்யவும், எதிர்காலம் சிறப்பாக அமையும் பிரிட்டன் சிறந்த நாடு. குறுகிய காலத்தில் நாம் சந்திக்கும் சவால்களை நேர்மையுடனும், நம்பகத்தன்மையான திட்டத்தால் சந்திக்க வேண்டும்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் திட்டங்களுடன் என்னிடம் சரியான திட்டமிடல் இருக்கிறது. முதலில் நாட்டில் நிலவும் அதிகமான பணவீக்கத்தை குறைக்க என்னிடம் தெளிவான, நேர்மையான திட்டமிடல் இருக்கிறது. மக்களின் ஆதரவு இருந்தால்மட்டுமே பணவீக்கத்தைக் குறைக்க முடியும்.
வளர்ச்சிக்கான அடிக்கல்லை நட முடியும். வரிக்குறைப்பு செய்ய முடியும், பிரக்சிஸ்டை பயன்படுத்தி ஆரோக்கியமான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இதுதான் பிரட்டனைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் . பிரிட்டனுக்காகவும்,கன்சர்வேட்டிவ் கட்சிக்காகவும் இரவுபகல் பாராமல் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்
பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவது இதுதான் முதல்முறையாக இருக்கும். ரிஷி சுனக் பிரதமராக வருவதற்கு பிரிட்டனில் உள்ள இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் அமோக ஆதரவுஅளித்துள்ளனர், கன்சர்வேட்டிவ் கட்சியிலும் ஆதரவு அதிகரித்துள்ளது.
புதிய பிரதமர் பதவிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை முடியும் நிலையில், திங்கள்கிழமை முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.