மனைவி விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வியட்நாமில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு
பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மனைவி விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வியட்நாமில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது; ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனைகள்: நீங்கள் மனைவியாக தேர்வு செய்யும் பெண்கள் கற்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யும் பெண்கள், 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
நீங்கள் தேர்வு செய்த பெண் ஒரு வருடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், கற்புடன் உள்ள மற்றொரு பெண் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்துக்கு கண்டனம் எழுந்திருந்தாலும், சிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.