அமெரிக்காவுக்கு லாபம் என்றால் சீனாவுடன் கூட கைகோர்க்க தயார்...!! உண்மை முகத்தை காட்டிய ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2020, 5:45 PM IST
Highlights

 சீனா முதலில் கொரோனா தடுப்பூசியை தயாரித்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாரா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
 

அமெரிக்காவுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த ஒரு நாட்டுடனும் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனா, முதலில் கொரோன வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்தால் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாரா? என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் 80க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனாவால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வைரஸின் கொடூர தாக்குதலால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் நிலைகுலைந்துபோயுள்ளது. இதனால் தனது ஆற்றாமையையும், கோபத்தையும் அமெரிக்கா சீனா மீது வெளிப்படுத்தி வருகிறது. எனவே சமீபகாலமாக இருநாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வெளிப்படையான மோதலாகவே மாறியுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி  கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் ஒருபுறம் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உலக அளவில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்கா,பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம்,  செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர், அதில்  சீனா முதலில் கொரோனா தடுப்பூசியை தயாரித்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாரா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு  பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய எந்த ஒரு  நாட்டுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார். அமெரிக்காவில் covid-19 சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் அதன் செயல்திறன் மற்றும் சிகிச்சை அடிப்படையில் நாங்கள் மிகச்சிறப்பாக செயல்படுகிறோம் என்று அவர் தெரிவித்தார். உலகில் மிக விரைவில் ஒரு தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதை வினியோகிக்க அமெரிக்க ராணுவம் உதவுவதால் அது மக்களுக்கு உடனடியாக கிடைக்கும் என்றும்  அதிபர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நோயால்  நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம், அதன் பிடியில் இருப்பது யாரென்றும் அவர்களை பாதுகாப்பதை நோக்கியும் நகர்கிறோம். கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்பார்த்ததைவிட விரைவில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.  
 

click me!