7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்திய மண்ணில் தரையிரங்கிய ரஃபேல்..!! விண்ணதிர தரையிறங்கியது..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2020, 4:11 PM IST
Highlights

பிரான்சிலிருந்து 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து, 5 ரஃபேல் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின. ரஃபேல் சிறிது நேரம் அம்பாலா வான்பரப்பில் வட்டமிட்டு வின்அதிர கர்ஜித்த பின்னர் ஏர்பேஸில் சுமூகமாக தரையிறங்கியது.

இந்தியா நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி இன்று இந்தியா வந்தடைந்தது. பிரான்சிலிருந்து 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து, 5 ரஃபேல் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின. ரஃபேல் சிறிது நேரம் அம்பாலா வான்பரப்பில் வட்டமிட்டு வின்அதிர கர்ஜித்த பின்னர் ஏர்பேஸில் சுமூகமாக தரையிறங்கியது. விமானப்படையில் 5 ரஃபேல்களும் இணைக்கப்பட்ட பின்னர் வான்படை திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்த நாடாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது. 

1997ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் விமானங்கள் விமானப்படையில்  இணைக்கப்பட்டு  22 ஆண்டுகளுக்கு பிறகு இறக்குமதி செய்யப்படும் முதலாவது போர் விமானம் ரஃபேல் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுமார் 58,000 கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்-8 ஆம் தேதி, மூன்றாவது ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் அரசிடம் இருந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  முறையாக பெற்றுக்கொண்டார், 

இதனையடுத்து முதற்கட்டமாக பிரான்சிலிருந்து அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன, பிரான்சில் இருந்து 7000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இவை இன்று பிற்பகல் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. முன்னதாக  விமானப்படைத் தளத்தை சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு எந்தவிதமான ட்ரோன்களும் பறக்க தடை விதிக்கப்பட்டது, விமானப்படை தளத்தை ஒட்டியுள்ள  கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும்  விமானங்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.  இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியில் கம்பீரமாக அம்பாலா விமானப்படை தளத்திற்கு ரஃபேல் வந்திறங்கியது. 

ரஃபேலை மேற்கு ஏர் கமாண்டின் முக்கிய அதிகாரிகள், ஏர் சீஃப் மார்ஷல், ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் படாயா உள்ளிட்டோர் வரவேற்றனர். அம்பாலா ஏர்பேஸில் ரஃபேலின் படை முதற் படைப்பிரிவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.  ரபேல் தரையிறங்கியவுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார். அதில், போர் பறவை அம்பாலாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்திய நிலத்தில் ரஃபேல் தரையிறங்கியது,  இராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார். 

ரஃபேல் இந்தியாவின் வான்வெளியில் நுழைந்தபோது, ​​அதை ஐ.என்.எஸ் கொல்கத்தா தொடர்பு கொண்டு வரவேற்றது. இந்த கடற்படைக் கப்பல் ரஃபேல் படையினரை அணுகி, 'அம்புத் தலைவரே... இந்தியப் பெருங்கடலுக்கு வருக... ஹேப்பி லேண்டிங், ஹேப்பி ஹண்டிங். என வரவேற்றது. 'அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் சக்தி கொண்ட இந்த விமானம் சுமார்  55 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தும் எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட உலகின் ஒரே போர் விமானம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திறன் நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு இராணுவத்தினரிடமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!