இதுவரை இந்நோய் பூனையிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பூனைக்கு ஆரம்பத்தில் ஒரு தனியார் கால்நடை மருத்துவர் சிகிச்சை வழங்கினார்,
சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரிட்டனில் வீட்டில் வளர்க்கப்படும் ஒரு பூனைக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் விலங்கு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கொரோனா பாதித்த முதல் பிரிட்டிஷ் விலங்காக இந்த பூனை கருதப்படுகிறது. இந்த பூனையிடமிருந்து தொற்று மேலும் பரவக் கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரிட்டன் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில் 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலக அளவில் சுமார் 6 லட்சத்து 63 ஆயிரத்து 775 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் உலக அளவில் வேகமாக நடைபெற்று வரும்நிலையில், வைரஸ் தொற்று பட்டியலில் பிரிட்டன் 10வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சத்தி 692 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு சுமார் 45 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், பிரிட்டனில் ஓரளவிற்கு வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளநிலையில் லண்டனுக்கு அருகிலுள்ள சர்ரேயில் ஒரு ஆய்வக சோதனைக்குப் பிறகு வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள தலைமை கால்நடை அதிகாரி இதை உறுதி செய்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அத்தனையும் அதன் உரிமையாளரிடம் இருந்தே பூனைக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவ அறிக்கை, பூனைக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளது. இருப்பினும் இங்கிலாந்தில் ஒரு மிருகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை என கூறியுள்ளது.
இதுவரை இந்நோய் பூனையிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவவில்லை என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பூனைக்கு ஆரம்பத்தில் ஒரு தனியார் கால்நடை மருத்துவர் சிகிச்சை வழங்கினார், அப்போது பூனைக்கு ஏர்பஸ் வைரஸ் தாக்கி இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் பின்னர் covid-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுபோது அதற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள, பிரிட்டன் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ்டின் மிடில்மிஸ் இது ஒரு மிகவும் அரிதான நிகழ்வு என கூறியுள்ளார். செல்ல பிராணிகளிடம் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய அவர், இங்கிலாந்தில் இது முதல் நிகழ்வு என்றாலும், பிற இடங்களில் இதே போன்று விலங்குகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது என கூறியுள்ளார்.